Categories
உலக செய்திகள்

எதுக்கு போலீஸ் ஆம்புலன்ஸ விரட்டிட்டு போறாங்க.. ஆச்சர்யமாக பார்த்த மக்கள்.. பின் நடந்த சம்பவம்..!!

பிரான்சில் ஆம்புலன்சை காவல்துறையினர் விரட்டிச் செல்லும் அபூர்வ காட்சி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் உள்ள Ain என்ற பகுதியில் இருக்கும் முதியோர் இல்லத்தின் முன் எஞ்சின் அணைக்கப்படாமல் ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்துள்ளது. அதனை யாரோ ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்பு காவல்துறையினர் ஆம்புலன்சில் வைக்கப்பட்டிருந்த ஜிபிஎஸ் டிராக்கர் மூலமாக அது எந்த பாதையில் செல்கிறது என்பதை கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் அதனை காவல்துறையினரால் நிறுத்த முடியவில்லை. இதனால் தான் காவல்துறையினர் அந்த ஆம்புலன்சை விரட்டி சென்றிருக்கின்றனர்.

மேலும் சுமார் ஒரு மணி நேரமாக காவல்துறையினர் ஆம்புலன்ஸை விரட்டியுள்ளனர். எனினும் அந்த ஆம்புலன்ஸ் சுற்றி சுற்றிவந்து ஒரு வழியாக முதியோர் இல்லத்தின் முன்பே வந்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் ஆம்புலன்ஸை சுற்றி வளைத்துள்ளனர்.

ஆனால் ஆம்புலன்சில் இருந்து இறங்கியதோ 65 வயது பெண்மணி. மேலும் அந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த பெண்மணி தான் அவர். ஆனால் திடீரென்று ஆம்புலன்ஸை ஏன் எடுத்துச் சென்றார் என்பது தற்போது வரை தெரியவில்லை.

Categories

Tech |