Categories
உலக செய்திகள்

எதுக்கெல்லாம் போராட்டம் பாருங்களே…. “சுதந்திர அணிவகுப்பு”…. தடுப்பூசியை எதிர்க்கும் லாரி டிரைவர்கள்….!!!

தடுப்பூசி கட்டாயம் செலுத்துவதை எதிர்த்து கனடா நாட்டு லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கனடா நாட்டிலுள்ள லாரி டிரைவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள  எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி “சுதந்திர அணிவகுப்பு” என்கிற பெயரில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார்கள். மேலும் இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் கனடா நாட்டு அரசுக்கு பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது. இந்நிலையில் லாரி டிரைவரின் போராட்டத்தால் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டு பொருளாதார சீர்குலைவு ஏற்படும் அபாயம் உருவாக்கி உள்ளதாக கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனடா நாட்டின் போக்குவரத்துத்துறை மந்திரி  ஒமர் அல்காப்ரா கூறுகையில்,  அமெரிக்காவின் டெட்ரயாட் மற்றும் கனடாவின் வின்ட்சர் நகரை இணைக்கும் தூதர் பாலம், உலகின் மிக முக்கியமான எல்லை கடக்கும் பாலங்களில் ஒன்று. கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மொத்த வர்த்தகத்தில் 25% இந்த பாலம் வழியாக நடக்கிறது. தற்போது இந்த பாலத்தை போராட்டக்காரர்கள் ஒரு வாரத்துக்கு மேலாக முற்றுகையிட்டு இருப்பதால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தடைகளால் பொருளாதார மற்றும் விநியோக சங்கிலி கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்” என்றார்.

Categories

Tech |