பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாச்சலம் பேசுகையில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் சங்கம் நாளை முதல் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வங்கிகள் முழுமையாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு நாட்கள் பரிவர்த்தனை, ரொக்கம், டெபாசிட், ஏடிஎம் உள்ளிட்ட வங்கி சேவைகள் பெரும் அளவில் பாதிக்கப்படலாம்.