பிரேசிலை சேர்ந்த இரட்டை இளைஞர்கள் அறுவை சிகிச்சை செய்து பெண்களாக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலை சேர்ந்த மாயா மற்றும் சோபியா ஆகிய இருவரும் இரட்டையர்கள். இவர்கள் அனைத்து இடங்களுக்கும் ஒன்றாகவே செல்வது, ஒன்றாக உடை அணிவது என்று அனைத்தையுமே ஒன்றாக செய்பவர்கள். மேலும் இவர்கள் பிறக்கும்போது ஆணாக பிறந்தவர்கள். ஆனால் எதற்காகவோ இருவரும் ஆண்களாக வளர விரும்பாமல் பாலின மாற்று அறுவை சிகிச்சையை இருவரும் சேர்ந்தே மேற்கொள்ள முடிவெடுத்தார்கள்.
இதற்கு அவர்களின் பெற்றோரும் சம்மதித்து அறுவை சிகிச்சைக்கு அதிக பணம் வழங்கி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இதனைத்தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் Dr. jose carles Martins என்ற மருத்துவர் 5 மணி நேரமாக அறுவை சிகிச்சை செய்து இந்த இரட்டை இளைஞர்களை பெண்களாக மாற்றியுள்ளார்.
மேலும் இவ்வாறு இரட்டை இளைஞர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறையாகயிருக்கும் என்று தான் கருதுவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போதும் அதே மகிழ்வுடன் மாயா மற்றும் சோபியா பெண்களாக வலம் வருகிறார்கள்.