Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எது நமக்கு…. குழப்புதே…. “அடேய் கேமரா மேன்”…. ட்ரெண்ட் ஆன அஸ்வின்….. ஸ்வெட்டரை கண்டுபிடித்தது எப்படி?… இப்படித்தான்.!!

அஸ்வின் 2 ஸ்வெட்டரை கையில் வைத்துக் கொண்டு எது நம்முடையது என குழம்பிய வீடியோ வைரலான நிலையில், அவர் கலகலப்பாக பதிலளித்துள்ளார்..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிட்னியில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. அதன் பின் நாளை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் அடிலெய்டு மைதானத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்..

இதற்கிடையே தனது கடைசியில் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை கடந்த 6ஆம் தேதி மெல்போர்ன் ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டிக்கு முன்னதாக டாஸ் போடும்போது கேப்டன் ரோஹித் சர்மா நெறியாளரிடம் பதிலளித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த அஸ்வின் 2 ஸ்வெட்டரை கையில் வைத்துக் கொண்டு ஏதோ செய்து கொண்டு இருந்தார். இரண்டு ஸ்வெட்டரில் எது நம்முடையது என குழம்பிய அவர் ஒரு வழியாக கடைசியில் முகர்ந்து பார்த்து தனது ஸ்வெட்டர் எது என்று அவர் கண்டுபிடித்துள்ளார். அஸ்வின் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். அதில் ஒரு பயனாளி பதிவிட்ட வீடியோவை பகிர்ந்து கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் கூட கலாய்த்து ட்விட் செய்து இருந்தார். அதில், இந்த வீடியோவை ஏற்கனவே பலமுறை பார்த்தேன். மீண்டும் மீண்டும் என்னை சிரிக்க வைக்கிறது. அஸ்வின் தயவுசெய்து சரியான ஸ்வெட்டரைத் தேர்ந்தெடுப்பதற்கான உங்கள் டெக்னிக் லாஜிக்கை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.” என்று கூறியிருந்தார்.

அதற்கு ட்விட்டரில் பதிலளித்த அஸ்வின், 2 ஸ்வெட்டரை வைத்து சைஸ் பார்த்தேன், கண்டுபிடிக்க முடியவில்லை, இன்ஷியல் இருக்கிறதா என்று பார்த்தேன், அப்பவும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக நான் யூஸ் பண்ற பர்ஃபியூம் வாசத்தை வைத்து முகர்ந்து பார்த்து தான் கண்டுபிடித்தேன். அடேய் கேமராமேன் என்று கலகலப்பாக பதில் அளித்து இருந்தார். அஸ்வினின் பதிவுக்கு கீழ் பலரும் கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர்.

பொதுவாக நாம் அனைவரும் ஒரே மாதிரியான ஆடை அணிந்து இருந்தால் அதனை கண்டுபிடிப்பது ஒரு வழியாகி விடும். உதாரணமாக நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலாத்தளம் என ஏதாவது ஒரு இடத்திற்கு குரூப் டிரஸ்ஸில் நாம் சென்றால், அங்கு மொத்தமாக வைத்திருக்கும் போது உடை மாறலாம். அதனை கண்டுபிடிக்க ஒரு வழி ஆகிவிடும். அதனை கண்டுபிடிக்க அஸ்வின் ஒரு புதிய ஐடியாவை கண்டுபிடித்துள்ளார் என்று அவரை கிண்டல் செய்து வருகின்றனர்..

Categories

Tech |