Categories
அரசியல் மாநில செய்திகள்

எது நல்லதுன்னு ஒன்னு சொல்லுங்க ? நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி – சீமான் பேட்டி …!!

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மக்களின் கருத்தை கேட்காமல் ஒரு சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதாகவும், வேளாண் சட்டங்களை நல்ல சட்டங்கள் என்று கூறும் தமிழக முதலமைச்சர் இது குறித்து தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் மக்களின் எதிர்ப்புணர்வுக்கு மதிப்பளித்து, இந்த சட்டம் நல்ல ஒரு சட்டம் என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடிக்க கூடாது, விளக்குங்கள் என்று சொல்கின்றோம்.

இது நல்லதாக இருக்கிறதா என்று எங்களுக்கு தெரியவில்லை. அப்போ இந்த இடத்தில் விவசாயிகளுக்கு இவ்வளவு நன்மை உள்ளது என்று ஒன்று சொல்லுங்கள். ஒரு அரசு மக்களின் கருத்துக்களை கேட்காமல், அவர்களின் நலனை கவனத்தில் எடுக்காமல் ஒரு சட்டத்தை கொண்டு வந்தால் அது எப்படி இருக்க முடியும் என தெரிவித்த சீமான்   சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் கூறினார்.

Categories

Tech |