எல்லையில் எந்த சம்பவம் நடந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இந்திய பாதுகாப்பு படைகள் தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் லடாக்கில் சீனா அத்துமீறிய தாக்குதல் நடத்தியதால், இந்தியா மற்றும் சீனா இடையில் பலத்த மோதல் ஏற்பட்டது. அது போன்று கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் பள்ளத்தாக்கு பகுதியே ஆக்கிரமிப்பு செய்வதற்காக சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதனால் எல்லை பிரச்சினை மேலும் மோசமடைந்துள்ளது. அதனால் சீனாவுடனான எல்லைப் பகுதியில் அதிக அளவு பதற்றம் நிலவியது.
இந்நிலையில் எல்லைப் பகுதியில் எந்த சம்பவம் நடந்தாலும் அதனை மன தைரியத்துடன் எதிர்கொள்வதற்கு இந்திய பாதுகாப்பு படையினர் தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “எல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற நிலை நீடித்து வருகிறது. எந்த சம்பவம் நடந்தாலும் அதனை எதிர்கொள்ள பாதுகாப்பு படைகள் தயாராக இருக்கின்றன. எதிர்காலங்களில் மற்ற நாடுகளுடன் ஏற்படும் மோதலில் வெற்றி காண்பதில் இமான் அப்படை முக்கிய பங்காற்றும்”என்று அவர் கூறியுள்ளார்.