Categories
அரசியல்

எதையும் மறக்கல….! மண்டியிட்டே ஆக வேண்டும்…. மோடிக்கு இது ஒரு நல்ல பாடம்…. கரூர் எம்பி சாடல்…..!!

மோடி பஞ்சாபிற்க்கு செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்ட தொடர்பாக கரூர் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை பஞ்சாப் விவசாயிகள் தங்கள் மாநிலத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது 700 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்ததை இன்னும் மறக்கவில்லை. மேலும் மத்திய அமைச்சரின் மகன் கார் ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்ததை அவர்கள் நினைவில் வைத்திருக்க தானே செய்வார்கள் என கரூர் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார். பிரதமர் மோடி திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக கரூர் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஓராண்டு காலமாக விவசாயிகள் கடும் குளிரிலும் கடும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் போராட்டம் நடத்தியதையும் இந்த கடும் போராட்டத்தால் விவசாயிகள் 700 விவசாயிகள் மரணமடைந்ததையும் மோடி நினைவு கூற வேண்டும் என கூறியிருந்தார்.

மேலும் மத்திய அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்ததை அவர்கள் எவ்வாறு மறப்பார்கள் என கேட்டுள்ளார். அதிகாரம் எவ்வளவு வலிமையானது என்றாலும் அது மக்கள் சக்தியின் முன் மண்டியிட்டு ஆக வேண்டும் என கூறியிருந்தார். மேலும் இந்த சம்பவத்திற்காக பிரதமருக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பில் குறைவு உள்ளது என குற்றம்சாட்ட முடியாது. ஏனெனில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து பிரதமரே நேரில் பார்த்துள்ளார். மேலும் இதற்கு பஞ்சாப் முதல்வரை குற்றம் கூறி எந்த பயனும் இல்லை என அவர் குறிப்பிட்டிருந்தார். பயணத்திட்ட மாறுபட்டிருக்கும் காலி நாற்காலிகளுக்கும் பஞ்சாப் முதல்வர் எவ்வாறு பொறுப்பாக முடியும் என அவர் கேள்வி கேட்டிருந்தார்.

Categories

Tech |