Categories
மாநில செய்திகள்

எத்தனை ஆயிரம் கோடி ஆனாலும் பரவாயில்லை – செம முடிவு எடுத்த எடப்பாடி சர்க்கார் ..!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிட கூடிய அதிமுக வேட்பாளரும்  அமைச்சருமான விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், புதுக்கோட்டை மாவட்டம் பகுதி வறண்ட பகுதி. அந்த வறண்ட பகுதியில் இருக்கின்ற விவசாய பெருமக்கள் ஐம்பதாண்டு காலமாக அரசுக்கு குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த விவசாய பொதுமக்கள்… எங்களுக்கு எங்கள் பகுதிகளில் இருக்கின்ற வறண்ட  ஏரிகளை மேட்டூரில் இருந்து வெளியேறுகின்ற உபரி நீரை… கதவனை கட்டி தடுத்து எங்களுடைய ஏரிக்கு நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

அமைச்சர் பாஸ்கரும் தொடர்ந்து என்னை வலியுறுத்திக் கொண்டிருந்தார். அதையெல்லாம் அம்மாவுடைய  அரசு கவனமாக எடுத்துக்கொண்டு எத்தனை ஆயிரம் கோடி ஆனாலும் பரவாயில்லை, இந்த திட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொல்லி. காவிரி குண்டாறு திட்டத்தை நிறைவேற்றிய அரசு அம்மாவுடைய  அரசு. இந்த பகுதியில் புதுக்கோட்டை மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சியில் நேரடியாக என்னை அழைத்து வந்து திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

நீர் மேலாண்மையில் இதுவரை 14 ஆயிரத்து 400 கோடி ரூபாயில் எந்த திட்டத்தையும் நாங்கள் கொண்டு வரவில்லை, இதுதான் முதன்முறை. நம்முடைய புதுக்கோட்டை மாவட்டம் வளம்பெற செழிக்க, பசுமையாக 14 ஆயிரத்து 400 கோடி ரூபாயில் அந்தத் திட்டத்திற்கு இங்கு அற்புதமாக அடிக்கல் நாட்டினோம்.  எதை சொல்கிறோமோ அதை எல்லாம் சாதித்து காட்டுகிறோம். இன்னும் மூன்றாண்டு காலத்தில் இந்த திட்டம் நிறைவேறும் போது, எங்கு எல்லாம் … வறண்ட பகுதி எல்லாம் செழுமையான வாழையும், மஞ்சளும், கரும்பும் செழித்து ஓங்கி வளரும்.

விராலிமலையில் முருகன் கோயிலுக்கு போவதற்கு மலைப்பாதையில் ரோடு போட்டு கொடுத்து இருக்கிறோம். இங்கே இருக்கின்ற பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஐடிசி பிஸ்கட் கம்பெனியில் சுமார் 3,000 பேருக்கு வேலை கிடைக்கிறது. 3000 பெண்களுக்கு வேலை கிடைக்க கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கி தந்திருக்கிறோம். வறண்ட பகுதி மக்களுக்கு, இந்த தொழிற்சாலை மூலமாக வேலை வாய்ப்பு உருவாக்கித் தந்துள்ளோம். இந்த பகுதி மக்கள் தனி வட்டம் வேண்டும் என்று கேட்டார்கள், அதையும் உருவாக்கி தந்துள்ளோம்.

இங்கே பேருந்து  நின்று செல்வதற்கு பேருந்து நிலையம்  வேண்டும் என்று கேட்டீர்கள். அந்த பஸ் ஸ்டாண்ட் அமைத்துக் கொடுத்ததும் அம்மாவுடைய அரசாங்கம். மருத்துவமனையில் சிடி ஸ்கேன் கேட்டீர்கள்… அதையும்  கொடுத்தது அம்மாவுடைய அரசாங்கம். எதை எதையெல்லாம் கேட்டீர்களோ  அதையெல்லாம் செய்து கொடுத்தோம். நல்ல சாலை வசதி கிராமத்திலிருந்து  நெடுஞ்சாலை வரைக்கும் சிறப்பான சாலை வசதி செய்து கொடுத்த ஒரே அரசாங்கம் அம்மா அரசாங்கம்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும், கொடுக்காத  வாக்குறுதியையும்  நிறைவேற்றும் என தமிழக முதல்வர் பேசினார்.

Categories

Tech |