Categories
மாநில செய்திகள்

எத்தனை சிக்கல்….? தொடர் கனமழை…. மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து….!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. அதன்பிறகு ஊரடங்கு கட்டுப்பாட்டில் படிப்படியான தளர்வை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி முதல் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஊட்டி-குன்னூர் இடையே 3 முறை மற்றும் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே ஒரு முறை இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயில் ஊட்டியில் இருந்து குன்னூருக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.350 மற்றும் இரண்டாம் வகுப்பு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் மேட்டுப்பாளையத்துக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.600 மற்றும் 2 ஆம் வகுப்பு ரூ.295 என்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே பாறை விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்ததால் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு கடந்த அக்டோபர் மாதம் மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. இதனிடையே ஊட்டி ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் திரண்டது. அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே அடர்லிக்கும் ஹில்குரோவுக்கு இடையில் 16 கிலோ மீட்டரில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டதால் 2 நாட்கள் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

அதன்பிறகு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை  தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி கல்லார்-அடர்லி பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் மேட்டுப்பாளையம் ஊட்டி ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் பாறைகள் மலைப்பகுதியில் இருந்து உருண்டு விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டு ஊழியர்கள் அவற்றை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தண்டவாள சீரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. ஆனாலும் தொடர் மழை காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |