Categories
அரசியல்

-எத்தனை சோதனைகள் வந்தாலும்…. வழக்குகள் போட்டாலும்…. தங்கமணி கெத்து…!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முறைகேடாக பெருமளவில் கிரிப்டோ கரன்சியை பணம் சேர்த்துள்ளதாக முதல் அறிக்கையில் தகவல் வெளியானது. எனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த‌தாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ்குமாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் ஆவணங்கள் சிக்கின. ஆவணங்களின் கணக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில் ரூ.2.37 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவு  லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, எத்தனை வழக்குகள் வந்தாலும் சரி, எவ்வளவு சோதனை வந்தாலும் சரி அதிமுக சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றி பெறும். காலை முதல் எனக்கு ஆதரவளித்து வந்த அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.

Categories

Tech |