கர்நாடக மாநிலத்தில் கார்வார் என்ற ஆற்றிலிருந்து முதலை வெளியில் வந்து ஊருக்குள் ஹாயாக வாக்கிங் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கார்வார் அருகே பிரபல சுற்றுலா தலமாக தண்டேலி என்ற பகுதி உள்ளது. இதன் அருகே உள்ள கோகிலபனா என்ற கிராமத்தை ஒட்டி காளி என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் முதலைகள் ஏராளமான வசிக்கின்றன. இந்த நிலையில் அந்த ஆற்றில் இருந்து வெளியே வந்த ஒரு முதலை மெதுவாக ஊருக்குள் நுழைந்து வாக்கிங் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை பார்த்த அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் முதலில் அலறியடித்து ஓடினர். பின்னர் அந்த முதலையை பின்தொடர்ந்து சென்று செல்போனில் படம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் அந்த முதலையை மீட்டு மீண்டும் அந்த காளி என்ற ஆற்றில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.