சுவிஸ் அறிவியலாளர்கள் குழு ஒன்று மனித உடலில் உள்ள வெப்பத்தை உபயோகித்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பொதுவாக மனிதர்களுக்கு காய்ச்சல் வரும் போது உடல் சூடாக இருப்பதை உணர முடியும். இந்த வெப்பம் குளிர் இரத்த பிராணிகளிடமிருந்து நம்மை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. மேலும் மனித உடலில் உள்ள வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? மனித உடலில் உள்ள வெப்பத்தை சேமித்து அதிலிருந்து மின்சாரம் உருவாக்கும் முயற்சியில் பெட்ரோல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒரு பிரிவாகிய மித்ராஸ் அமைப்பு இறங்கியுள்ளது.
மனித உடலில் இருக்கும் வெப்பத்தை உபயோகித்து 100 வாட் மின்விளக்கு எரியச் செய்ய முடியும். மேலும் மனித உடலின் பெரும்பகுதி சுற்றுப்புறத்தில் இருந்து வெளியேறும் வெப்ப ஆற்றல் வீணாகிறது. அதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம் என்னும் முயற்சியில் அறிவியலாளர்கள் இறங்கியுள்ளனர்.