கேரளா மாநிலம் கொல்லம் அருகிலுள்ள தென்மலை உருகுன்னு பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தென்மலை போலீஸ் நிலையத்தில் நான் ஒரு புகார் கொடுக்கச் சென்றபோது என் புகாரை விசாரணை செய்யாமல் இன்ஸ்பெக்டர் விஷ்வம்பரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சாலு ஆகியோர்கள் என் கையில் விலங்கு போட்டு குற்றவாளி போல் தாக்கினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, போலீசார் நடவடிக்கை நீதிபதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனை தொடர்ந்து சமீபகாலமாக கேரளா போலீஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகிறது. இதுகுறித்து பலமுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் காவல்துறை கண்டுகொள்ளவில்லை. சட்டத்திற்குட்பட்ட அறிவுரைகளையும் மற்றும் உத்தரவுகள் மட்டும் தான் போலீசார் அமல்படுத்த வேண்டும்.
ஆனால் சொந்த பிரச்சினையை பொது மக்கள் மீது திணிக்க போலீசுக்கு அதிகாரம் கிடையாது. இதற்கு முன்பாகவே போலீசின் மோசமான நடவடிக்கை மீது கடுமையான தீர்ப்பை வழங்கி இருக்க வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது இந்த சம்பவங்கள் குறைந்திருக்கும். நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதை போலீசார் மறக்கக் கூடாது என்றும் இனியும் போலீஸ் திருந்தாவிட்டால் நம் நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.