தமிழகத்தில் எத்தனை வேட்புமனுக்கள் ஏற்பட்டது என்பது இன்று மாலை போல் தெரியவரும்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை தொகுதி தொகுதியாக சென்று செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் அத்தனை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறித்த முழு விவரம் இன்று மாலை தெரிய வரும் என தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் சிவிஜில் செயலி மூலம் பெறப்பட்ட 2313 புகார்களில் 1607 புகார்கள் மீது வேடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூபாய் 265 கோடி மதிப்பில் பணம் நகை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அவர் முழுவிவரங்கள் தெரிவித்தார்.