தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்பிறகு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து சென்னை அருகே கரையைக் கடந்தது பெரும்பாலான இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். தற்போது கடந்த இரண்டு நாட்களாக ஓரளவு மழை குறைந்துள்ள நிலையில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் நவம்பர் 26ம் தேதி முதல் 4 நாட்களுக்கு சென்னையில் அதிக கனமழை பெய்யும் என்று நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை சென்னையில் சில இடங்களில் கனமழை பெய்யும். நாளை மற்றும் நாளை மறுநாள் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதன்கிழமை ரெஸ்ட் விட்டு, வியாழக்கிழமை மீண்டும் மழை பெய்யும். வெள்ளிக்கிழமை முதல் 4 நாட்கள் அதிக மழை வெளுத்து வாங்கும் என குறிப்பிட்டுள்ளது.