Categories
மாநில செய்திகள்

எத்திசையும் தமிழ் மணக்க…. திமுக அரசு உழைத்திடும் – முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்க் கொடியைக் கையிலே ஏந்திகொண்டு தன்னுடைய பதினான்கு வயதிலேயே தாய்மொழி காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மொழி – இனப் போராட்ட வரலாற்றின் இன்றியமையாத சாதனைகளில் ஒன்று தான் நம் தமிழ் மொழிக்கு இந்திய அரசின் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்ததாகும்.

அத்தகைய செம்மொழித் தகுதிக்கு சிறப்பு சேர்க்கும் எத்திசையும் தமிழ் மணக்க திமுக அரசு உழைத்திடும். 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் மொழியை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்கிட திமுக பாடுபடும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |