பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அந்த மாநிலம் 117 தொகுதிகளை கொண்டது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் மோங்கியா பாஜகவில் இணைந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் 3 பாஜகவில் இணைந்தார். இவரை பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் நட்சத்திர பேச்சாளராக அல்லது வேட்பாளராக தமிழக பாஜக திட்டமிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பாஜகவில் இணைந்தது தொடர்பாக தினேஷ் மோங்கியா பேசுகையில், பாஜகவில் இணைந்து பஞ்சாப் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக பாஜகவை தவிர வேறு எந்தக் கட்சிகளும் சிறப்பாக செயல்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.