Categories
அரசியல் மாநில செய்திகள்

“எந்தத் காலத்திலும், இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்க கூடாது”… வைகோ ஆவேசம்… அதுக்கு இதுதான் காரணம்…!!!

இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுத்து விடக் கூடாது என்றும், அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஆட்சிமொழி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உள்துறை மந்திரி ‘அமித் ஷா இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழி, நான் என் தாய் மொழியை விட அதிகமாக இந்தியை நேசிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட இப்போது ஆங்கிலத்தில் எழுதப் படுவது இல்லை, என்று அவர் தெரிவித்திருப்பது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான அடக்குமுறை போக்கு.

உள்துறை அமைச்சகத்தில் இருந்து இந்தியில் கடிதம் வந்தால் தமிழ்நாடு அரசு அதனை திருப்பி அனுப்ப வேண்டும். ‘வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அயல்நாட்டு மொழி என்றால், நமக்கு இந்தி அயல்நாட்டு மொழி தான்’. தந்தை பெரியார் ‘வெள்ளையன் வெளியேறுகிறான். ஆனால் தமிழன் இந்திகாரனுக்கு அடிமை ஆகிறான்’ என்று சொன்னார். அந்த நிலைமை தான் இன்றைக்கும் நீடிக்கிறது. எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எந்த காலத்திலும் இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கக் கூடாது என்று அவர் அதில் கூறியுள்ளார்.

Categories

Tech |