Categories
அரசியல்

எந்தெந்த பொருளில் பிள்ளையார் செய்து வழிபட்டால்…. என்னென்ன பலன்கள் கிடைக்கும்…. வாங்க பார்க்கலாம்…!!!!

கணேசன், கணபதி, விநாயகர், பிள்ளையார் என்று பல்வேறு பெயர்களை வைத்து வணங்கக்கூடிய முதல் கடவுளாக பார்க்கப்படுபவர் விநாயக பெருமான். அந்த வகையில் நாளை இவருக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இவர் தாய் தந்தையினுடைய பேச்சு கேட்டு நடந்த பிள்ளை என்பதால் பிள்ளையார் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. எளிமையானவராக இருப்பதால் தெருவோரம் குளத்தங்கரை என எங்கும் தரிசிக்க கூடியவராக உள்ளார். எல்லா கடவுளுக்கும் முதன்மையானதாக இருப்பதால் கோவிலில் முதல் ஆளாக அமர்ந்திருப்பவர்.

முதலாவதாக வணங்கக் கூடியவரும் இவரே. அது மட்டும் இல்லாமல் எளிமைக்கு அடையாளமாக சுண்டல் அல்லது அருகம்புல் வைத்து வழிபட்டாலே நாம் வேண்டிய வரங்களை வாரி வழங்கக் கூடியவர். களிமண், கல்லால் செய்யப்பட்ட விநாயகர் என எப்படி வழிபட்டாலும் அருள்பவர் அவ்வளவு ஏன் பசு மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும். நம் மனதார வழிபட்டால் அனைத்து விதமான நலன்களையும் அள்ளித் தருவார்.

மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் ஆரோக்கிய வாழ்வு அருள்வார். கருங்கல்லினால் ஆன விநாயகரை எந்த காரியமும் வெற்றியில் முடிய அருள்வார். விபூதியால் செய்யப்பட்ட கணபதியை வழிபட்டால் வெப்பத்தால் வெப்பத்தால் ஏற்படும் நோய்களை தீர்க்கக் கூடியவர். குங்குமத்தால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் செவ்வாய் தோஷம் தீரும். சந்தனத்தால் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபட்டால் நல்ல பிள்ளைபேறு கிட்டும். உப்பினால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் பகைவர்களின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

வெல்லத்தினால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் உடலில் உள்ள கொப்பளங்கள் மறையும். சர்க்கரையால் செய்யப்பட்ட கணபதியை வழிபட்டால் வீட்டில் இனிமையான தருணங்கள் மேலோங்கும். மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் சகல செளபாக்கியங்களையும் அருள்வார். பசுவின் சாணத்தல் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கி, வீட்டில் விரைவில் சுப நிகழ்ச்சி நடக்கும். வெள்ளெருக்கில் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபட்டால் பில்லி சூனியம் அகலும். வாழைப்பழத்தால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் கணவன் – மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நம் விருப்பத்திற்கு ஏற்றார் போல் விநாயகரை வழிபட்டு நல்லருள் பெற்றிடுங்கள்.

Categories

Tech |