Categories
மாநில செய்திகள்

எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்….? வானிலை சொன்ன தகவல்….!!!!

தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ” டிசம்பர் 4ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். டிசம்பர் 5ஆம் தேதி சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

அதை தொடர்ந்து தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று வானிலை தெரிவித்துள்ளது, இதனால் கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இதன் காரணமாக மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |