Categories
தேசிய செய்திகள்

எந்த ஆவணமும் தேவையில்லை…. இனி ஆதாருடன் மொபைல் எண் சேர்ப்பது எளிது….!!!!

ஆதார் கார்டு என்பது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாது, மத்திய மாநில அரசிக் சலுகைகளை பெறுவதற்கு அடிப்படையாக இருக்கிறது. இந்த ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் என தினமும் மக்கள் ஆதார் மையத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர். நடைமுறையில் ஆதார் அட்டை திருத்தம் செய்தற்கு அதற்கு பல ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். ஆனால் தற்போது ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ எந்த விதமான ஆவணங்களும் சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என என இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI)-தனது ட்விட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆதாரின் நன்மைகள் மற்றும் ஆன்லைன் சேவைகளைப் பெற உங்கள் மொபைல் எண்ணை UIDAI இல் பதிவு செய்ய வேண்டும். பின்பு எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் உங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை சேர்க்கலாம்.

இது குறித்து வெளியாகி இருக்கும் ட்விட்டர் பதிவில், “உங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை சேர்க்க எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் உடனடியாக சேர்க்கலாம். அதன்படி உங்கள் ஆதார் அட்டையுடன் நீங்கள் ஒரு ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். அதேபோல் மொபைல் எண் கோரிக்கையைச் சேர்க்க / புதுப்பிக்க அருகிலுள்ள எந்த ஆதார் மையத்திற்கும் உங்கள் ஆதாரை எடுத்துச் செல்லுங்கள்.” என்று ட்விட்டரில் ஆதார் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |