எந்த உணவை சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி என்பது பற்றிய தொகுப்பு
சாப்பிட அமரும்போது மிகவும் நிதானமாகவும் அமைதியான மனதுடனும் இருக்க வேண்டியது அவசியம். மன உளைச்சலும் அல்லது கோபமும் சாப்பிடும்போது இருக்கக்கூடாது.
சாப்பிட அமர்ந்ததும் சில நிமிடங்கள் இறைவனுக்கு நன்றி கூறி விட்டு சாப்பிட தொடங்கலாம். குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடும் போது மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தாய்மார்கள் அனைவருக்கும் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொடுத்தால் சாப்பாட்டில் ருசி சேரும்.
உணவு சாப்பிடும்போது நன்றாக மென்று சாப்பிடவேண்டும் வாயிலேயே பாதி செரிமானம் முடிந்துவிட வேண்டும்.
அதிகமாக தண்ணீர் குடிப்பதை சாப்பிடும் போது தவிர்க்க வேண்டும். நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடும் போது தண்ணீர் அதிகமாகக் குடித்தால் செரிமானம் ஆவதற்கு தாமதம் ஏற்படும்.
சாப்பிடும் போது எப்போதும் முக்கால் வயிற்றுக்கு சாப்பிடுவது நல்லது. காய்கறிகள் அதிகமாகவும் சாதம் குறைவாகவும் எடுத்துக்கொள்வது நல்லது.
தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்து காய்கறிகள் கீரை வகைகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.