Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த கட்சியிலும் இதுபோல…. கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கல…. OPS செம டென்ஷன்….!!!!

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இது போன்ற கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் மாற்றுக் கட்சியிலிருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். அப்போது இபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் என்பவரும் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அதன்பின் நிகழ்ச்சியில்ஓபிஎஸ் , “எந்த ஒரு சர்வாதிகார எண்ணமும் தலைமை பொறுப்பில் இருக்கக் கூடியவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தான் சட்ட விதிகளை உருவாக்கினார்.

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இது போன்ற கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை.  எம்ஜி.ஆர், தலைமை பொறுப்பை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதுதான் தற்போது நடைபெறக்கூடிய தர்மயுத்தம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் அதை தர்மமே வெல்லும்” என்றார்.

Categories

Tech |