பல்வேறு சலுகைகளை தந்து வரும் தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கை எப்படி தொடங்குவது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
கடந்த சில நாட்களாகவே தபால் அலுவலகத்தில் சேமிப்பு என்பது பெருமளவில் அதிகரித்துள்ளது. அதிலும் முக்கியமாக இந்த கொரோனா தொற்று பாதிப்பு வந்த பிறகு மக்கள் அஞ்சல் கணக்கில் பணத்தை போட்டு வருகிறார்கள். போஸ்ட் ஆபீஸில் பலவிதமான சலுகைகள், வட்டி, சிறு சேமிப்பு திட்டங்கள் ஆகியவை கிடைக்கின்றன. அதேபோல் இந்த டிஜிட்டல் உலகில் வங்கிக்கணக்கில் பெரும்பாலான சேவைகளை தபால் அலுவலகம் பெறமுடியும். மேலும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டம், மூத்த குடிமக்களுக்கு சேமிப்பு திட்டம், பத்திரம் சேமிப்பு திட்டம், ஓய்வூதிய திட்டம், வைப்பு நிதி திட்டம், கிசான் விகாஸ் பத்திர திட்டம், பிக்சட் டெபாசிட் திட்டங்கள் என பலவிதமான திட்டங்கள் அஞ்சல் சேமிப்பு கணக்கில் உள்ளது.
இவை அனைத்தும் ஆன்லைனில் தொடங்கும் வசதியும் தற்சமயம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஆன்லைனில் எந்த கஷ்டமும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே போஸ்ட் ஆபீஸ் கணக்கை எப்படி தொடங்கலாம் என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். முதலில் நீங்கள் IPPS ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதில் வரும் அக்கௌன்ட் ஓப்பனிங் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பான் மற்றும் ஆதார் நம்பரை கொடுத்து அப்டேட் செய்ய வேண்டும். ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள பதிவு மொபைல் எண்ணுக்கு ஒரு ஒடிபி வரும். அதைக் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அதை தவிர கல்வித்தகுதி, முகவரி, நாமினி விவரம் உள்ளிட்ட அனைத்தையும் கொடுக்க வேண்டும்.
பின்னர் சப்மிட் ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் கணக்கு தொடங்கப்பட்டு விடும். இது ஒரு போஸ்ட் ஆபீஸ் டிஜிட்டல் சேமிப்பு கணக்கு ஆகும். இதனை ஒரு வருடத்திற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு வருடம் முடிந்த பிறகு நீங்கள் நேரடியாக தபால் அலுவலகத்திற்கு சென்று பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டும்.