Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராகவே முடியாது… ஓபிஎஸ் அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வர் ஆகவே முடியாது என்று துணை முதல்வர் ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, “வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இன்னும் இரண்டு வருடத்தில் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். திமுக ஆட்சியில் மக்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டம் ஒன்றையாவது செய்தார்களா என்றால் இல்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. கொரோனா காலகட்டத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது.

நாட்டைப் பற்றி சிந்திக்கக் கூடியவர் ஜெயலலிதா. திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு இருந்தது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்தட்டுப்பாடு சரி செய்யப்பட்டது. எதிர்க்கட்சியில் இருக்கும் போது அராஜகம் செய்யும் திமுக, ஆளுங்கட்சியாக வந்தால் எப்படி இருக்கும் என நீங்களே சிந்தித்து பாருங்கள். இந்த தேர்தலில் மக்கள் தெளிவான தீர்ப்பு வழங்க காத்திருக்கிறார்கள். அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும். நாங்கள் சொன்னதை செய்வோம். செய்வதை தான் சொல்வோம். ஆனால் திமுகவால் தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளதை எதையும் செய்ய முடியாது. இந்த தேர்தலில் திமுக கட்டாயம் படுதோல்வி அடையும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |