Categories
உலக செய்திகள்

எந்த குழுக்களுடனும் நாம் இணைய கூடாது…. இவர்களுக்கு இடையில் மட்டும் பாலமாக…. இம்ரான்கான் அதிரடி பேச்சு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத்தில் இன்று ‘அமைதி மற்றும் வளர்ச்சி நிறைந்த தெற்கு ஆசியா’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். இந்தக் கருத்தரங்கத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உறவு குறித்து அவர் பேசினார். அப்போது, “பனிப்போர் நோக்கிச் செல்லும் சூழ்நிலை உருவாகி வருகின்றன.

இதனால் நாடுகள் குழுக்களாக உருவாகி வருகின்றனர். இந்தக் குழுக்கள் உருவாக்குவதை தடுப்பதற்காக சீனா தீவிர முயற்சியில் ஈடுபட வேண்டும். ஏனென்றால் எந்த குழுக்களுடன் நாம் இணையக் கூடாது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தான் சிறந்த உறவு கொண்டுள்ளது. அந்த நாடுகளுக்கு இடையே உறவில் அதிகரித்து வருவரும் விரிசலை நிறுத்த பாகிஸ்தான் பாலமாக செயல்பட விரும்புகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |