Categories
அரசியல் தேசிய செய்திகள்

எந்த சட்டத்தின் கீழ் என்னை தடுத்து நிறுத்துகிறீர்கள்..? ராகுல் காந்தி ஆவேசம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூருக்குச் செல்ல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கடந்த ஞாயிறு அன்று லக்கிம்பூரில் நடந்த வன்முறையில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் காண ராகுல்காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் லக்னோ வந்தடைந்தார். அப்போது அவரை வெளியே வரவிடாமல் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினரும் தடுத்து நிறுத்தினர்.

இதனால் கோபமடைந்த ராகுல் காந்தி எந்த சட்டத்தின் கீழ் என்னை தடுத்து நிறுத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கமிட்டனர். இதனையடுத்துஅவருக்கு அங்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே அனைத்து அரசியல் கட்சிகளும் லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்க உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |