நடிகை பூஜா தனது வயதை வெளிப்படையாக கூறியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
மாதவன் நடிப்பில் வெளியான ஜேஜே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானர் பூஜா. அதன் பின் அட்டகாசம், உள்ளம் கேட்குமே, தம்பி, நான் கடவுள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்ற 2016ம் வருடம் இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான இவர் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை.
Akka comeback kodunga .
— Ganesh (@thedudehimself_) July 1, 2022
இந்த நிலையில் இவரின் போட்டோவை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டதை பார்த்த பூஜா நான் ட்விட்டரில் ஆக்டிவாக இல்லாத நிலையிலும் நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி என கூறியுள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர் அக்கா கம்பேக் கொடுங்கள் என கோரிக்கை விடுத்ததையடுத்து அவர் கூறியதாவது, ஐயோ ரொம்ப வயசாயிடுச்சுடா, 44 ஆயிடுச்சு, கம் பேக்னா சித்தி ரோல் தான் பண்ணனும் என்று கூறியுள்ளார். நான் ட்விட்டர் பக்கம் வந்து ஒரு ஆண்டு ஆயிடுச்சு. இன்ஸ்டா, ட்விட்டர் பக்கம் வர நேரமே இல்லை. அப்படியே நேரம் கிடைத்தாலும் பேஸ்புக் தான் வருவேன். அதிலேயே நேரம் போய் விடுகிறது எனக் கூறியுள்ளார். எந்த நடிகையும் அவ்வளவு சீக்கிரம் தனது வயதை சொல்லிவிட மாட்டார்கள். ஆனால் இவர் கூறியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.