வடகொரியா இன்றும் தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் பிளாஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த செயல் பல நாடுகளை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் தங்களது நட்பு நாடான அமெரிக்காவுடன் சேர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் வடகொரியா இன்று கண்டம்விட்டு கண்டம் பாயும் பிளாஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடல் பகுதியை நோக்கி சீறி பாய்ந்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.