Categories
உலக செய்திகள்

“எந்த நேரத்திலும் போர் மூளலாம்”…. ஊடகங்களில் வெளிவந்த செய்தி…. மறுத்த பிரபல நாடு….!!!

உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்ய ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும்  இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து  உக்ரைன் மீது படை எடுப்பதற்காகவே ரஷ்யா தங்களது வீரர்களை உக்ரைன் எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது என்று அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வருகின்றனர். ஆனால் ரஷ்யா இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதலை நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது.தற்போது உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்ய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

தற்போது இந்த செய்திகளை அமெரிக்கா நாடு மறுத்துள்ளது. மேலும் உக்ரைனில் போர் மூளும் அபாயம் உள்ளதாகவும் ரஷ்ய படைகள் பின் வாங்கவில்லை என்றும் அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிலிங்கன் “உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம். மேலும் உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகளை தயார் நிலையிலேயே வைத்துள்ளது. எனவே சூழ்நிலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

Categories

Tech |