ஆபத்தான நிலையில் இருக்கும் நீர்த்தேக்க தொட்டியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள திப்பணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இந்த நீர்த் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்து காணப்படுகிறது. அதன் தூண்களின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
எனவே அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக ஆபத்தான நிலையில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றி விட்டு புதிதாக நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.