Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

எந்த நோயும் அண்டாமல் இருக்க…நோய் எதிர்ப்பு சக்தி தேவை.. சாப்பிட கூடிய உணவுகள்..!!

நமது உடலில் நோய் எப்போது ஏற்படுகிறது என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது தான், எல்லா நோய்களும் எளிதில் நம்மை தொற்றிக் கொள்கின்றது.

நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • ஊட்டச்சத்து குறைபாடு
  • பலவீனமான உடல் அமைப்பு
  • மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்
  • மது
  • புகைப்பழக்கம்
  • தூக்கமின்மை

அதுமட்டுமில்லாமல் சர்க்கரை நோயும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு ஒரு காரணம். நம் உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிப்பதன் மூலம் மட்டுமே நம்மை நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.

நம் உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இரண்டே வழிகள் மட்டும் இருக்கிறது. ஒன்று உடற்பயிற்சி மற்றொன்று நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவது.

1.பேரிச்சை:

நம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து இதில் அதிகம் இருக்கிறது. தேனில் ஊற வைத்த பேரிச்சை  தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் முழுமையான சத்தை பெற முடியும்.  வளரும் குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு பழம் பேரிச்சை. ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக ஆண்களுக்கு ஏற்படக்கூடிய மலட்டுத்தன்மை நீங்கும்.

2. எலுமிச்சை:

உடலில் விட்டமின் “சி”குறைய ஆரம்பிக்கும் பொழுதுதான் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய ஆரம்பிக்கும். சளி முதல் புற்றுநோய் வரை வராமல் தடுக்கக்கூடியது.. தினமும் எலுமிச்சை ஜூஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து விட்டு வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த முடியும். ஜூஸ் எடுத்துக் கொண்டு வரும் வேளையில் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது.

3. பூண்டு:

ஆயுர்வேத மருத்துவத்தில் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களை குணமாக்க பூண்டு பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய அனிலின், வைரஸ் மற்றும் பாக்டீரியாவை அழிக்கும் திறன் கொண்டது. பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பூண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

4.மஞ்சள்:

இது இயற்கையான ஆண்டிபயோடிக் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான பொருள் ஆகும். மஞ்சள் ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது. மேலும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோயில் இருந்து நம்மை காக்க கூடியது. பாலில் மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து தினமும் பருகி வர நோய் எதிர்ப்பு சக்தி விரைவில் அதிகரிக்கும்.

5. முட்டை:

விட்டமின் “டி” அதிகம் உள்ள பொருட்களை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருவதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். விட்டமின் “டி” அதிகம் உள்ள உணவுகளில் மிக முக்கியமானது முட்டை. தினமும் காலையில் சூரிய வெயிலில் நிற்பது மூலமாகவும்  இயற்கையான முறையில் பெற முடியும். எலும்புகளின் உறுதிக்கு மிகவும் அவசியமான ஒன்று. வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுப்பது நான் ரொம்ப அவசியமானது.

முட்டையில் அதிக அளவு புரதம், கொழுப்பு அடங்கியிருக்கிறது. இது நம்  தசைகளை சீராக வைப்பது மட்டும் அல்லாமல், உடல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.  முட்டை  எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக வைப்பதற்கு ரொம்பவே உதவியாக இருக்கும்.

6. தேங்காய் எண்ணெய்:

அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இதில் இருக்கக்கூடிய லாரிக் அமிலம் உடலில் சென்று மாற்றம் அடைந்து விடுகிறது. மோனோலாரிக்  என்ற பொருள் தாய்ப்பாலில் மட்டுமே இருக்கிறது. இந்த அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

7. வெங்காயம்:

வெங்காயத்தில் இருக்கக்கூடிய செலினியம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதில் இருக்கக்கூடிய அலிசின் என்ற வேதிப்பொருள் பாக்டீரியா மற்றும் நச்சுக்களை உடம்பில் சேராமல் தடுக்கிறது. மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

8. பெரிய நெல்லிக்காய்:

இந்த பெரிய நெல்லிக்காயில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும். இது உடம்பில் ஏற்படக்கூடிய பாதிப்பை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. முக்கியமாக ரத்த வெள்ளை அணுக்களை உற்பத்தி அதிகரித்து உடலை தாக்கும் பல்வேறு நோய்களிலிருந்தும் நம்மை காக்க கூடியது. அடிக்கடி நோய்வாய்பட்டு வருபவர்கள் தினமும் ஒரு பெரிய பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

9. கொய்யாப்பழம்:

கொழுப்பு, புரதம், மாவுச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து அதிகமாகவும் உள்ள பழம் கொய்யா பழம். 100 கிராம் கொய்யாவில் 210 மில்லி கிராம் விட்டமின் சி இருக்கிறது. வயிற்றில் இரும்புச்சத்தை கிரகிக்க இந்த விட்டமின் சி மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது. கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி பலம் பெறும் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும். உடல் சுத்தமாகும், குடல் சம்பந்தமான பிரச்சனைகளும் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும்.

10 பாதம்:

நச்சுக்களை நீக்கி நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச் சிறந்த ஒரு பொருள் பாதாம். இது ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கும். தினமும் நீரில் ஊற வைத்த பாதாம் 3 முதல் 5 வரை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு மண்டலம் பலம் பெறும்.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள்

Categories

Tech |