தாத்தாவின் இறுதி சடங்கிற்காக இளவரசர் ஹரி பிரித்தானியா திரும்பிய போது, அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளை தனது பாதுகாப்பிற்க்காக அழைத்து சென்றுள்ளார்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் மூலம் இளவரசர் ஹரி, ஹூத்ரோ விமான நிலையத்திற்கு வந்திறங்கிய போது அங்குள்ள காவல் துறையினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தற்போது இளவரசர் ஹரி அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பட்டியலில் இடம்பெறாத போதும் பிரித்தானியாவில் இருக்கும் வரை அவருக்கு அங்குள்ள அதிகாரிகள் பாதுகாப்பு கொடுப்பார்கள். இந்நிலையில் இளவரசர் ஹரி அரசு குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த நாள்முதலே அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த முழு பாதுகாப்பானது விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவர் தனது தாத்தாவின் இறுதி சடங்குகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வந்துள்ளதால் அங்குள்ள அதிகாரிகள் அவருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இதற்கிடையே இளவரசர் ஹரி, தந்தை சார்லஸ் மற்றும் சகோதரர் வில்லியமுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் அவர் அமெரிக்கா திரும்புவதற்கு இரண்டு மணி நேரம் தாமதம் ஆகும் என்று தெரிகிறது. இளவரசர் ஹரிக்கு பிரித்தானியாவில் உள்ள அதிகாரிகள் பாதுகாப்பு அளித்து வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து அவருடன் பாதுகாப்புக்கு வந்த அதிகாரிகள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. மேலும் பிரித்தானியா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் இளவரசர் ஹரியை எப்போதும் நிழல்போல் பின் தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது.