Categories
தேசிய செய்திகள்

“எந்த பொருளுக்கும் ஜிஎஸ்டி அதிகரிக்கப்படவில்லை”…. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தகவல்…..!!!!

ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சா்கள் கலந்துகொண்டனா். இதையடுத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் பற்றி அமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் கூறியிருப்பதாவது “எந்த பொருளுக்கும் ஜிஎஸ்டி அதிகரிக்கப்படவில்லை.

புதியதாகவும் ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. பருப்பு உமி மீது 5 % ஆக இருந்த ஜிஎஸ்டி இப்போது முற்றிலுமாக நீக்கப்பட்டு உள்ளது. பெட்ரோலில் கலப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எத்தனால் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

Categories

Tech |