அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பு இருக்கும் எனக்கு ஆசை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி திமுக ஆட்சி அமைத்தபோது அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் எம்எல்ஏ-வாக தொடர்கிறார். இதனிடையே உதய நிதி அமைச்சராக வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கோவை மாவட்டம் காளடியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று மதியம் ஒரு மணி அளவில் நடைபெற்றது.
இந்த முகாமை இளைஞரணி செயலாளர் உதயநிதி தொடங்கிவைத்தார். பின்னர் பேசிய அவர் அமைச்சர், துணை முதலமைச்சர் பொறுப்புகளுக்கு என்னை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த பொறுப்புகளுக்கு ஆசை படாதவன் நான் என்று தெரிவித்துள்ளார்.