அனைத்து மாநில முதல்வர்களும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்திய முட்டாள் தான் அதை குறைக்க வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:”தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் ஆட்சி அமைந்ததிலிருந்தே வாட் வரி உயர்த்தப்படவில்லை. ஒரு பைசா கூட நாங்கள் உயர்த்தவில்லை. எந்த முட்டாள் நம்மிடம் வாட் வரியை உயர்த்தினார்களோ, அவர்கள்தான் குறைக்க வேண்டும். மேலும் பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரியை மத்திய அரசு நீக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.