Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்ல…. முதியவர் செய்த விபரீத செயல்…. போலீஸ் விசாரணை….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பெருச்சாக்கவுண்டன்பாளையம் பகுதியில் முத்தான்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பல்வேறு சிகிச்சை பெற்றும் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றம் இல்லாததால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைபார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக முத்தனை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்தான் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஜோடர்பாளையம் போலீசார் முதியவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |