Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எந்த முன்னேற்றமும் இல்லை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்..!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை அருகே தொண்டமநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரனுக்கு அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் எந்தவித பயனும் அளிக்கவில்லை.

இதனால் மனவேதனையில் இருந்த பிரபாகரன் வீட்டின் அருகே இருந்த ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து சோளிங்கர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |