Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மஞ்சு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மஞ்சு தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மஞ்சு பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |