Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எந்த முன்னேற்றமும் இல்லை” அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முல்லையூர் பகுதியில் பொன்ராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் அவதிப்பட்ட பொன்ராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த பொன்ராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |