Categories
தேசிய செய்திகள்

எந்த மொழிக்கும் இந்தி போட்டி கிடையாதா?… மத்திய உள்துறை அமைச்சருக்கு சரியான பதிலடி கொடுத்த கி.வீரமணி….!!!!!

சூரத்தில் நடந்த அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது “மாநில மொழிகளுக்கு எதிராக இந்தி என்ற கோணத்தில் தவறான பரப்புரை நடைபெற்று வருகிறது. இந்தியும்-குஜராத்தியும் போட்டியாளர்கள், இந்தியும்-தமிழும் போட்டியாளர்கள், இந்தியும்-மராத்தியும் போட்டியாளர்கள் என அவர்கள் பொய் பரப்புரை செய்கின்றனர். நாட்டிலுள்ள எந்த மொழிக்கும் இந்தி போட்டியாளராக இருக்கமுடியாது. நாட்டிலுள்ள அனைத்து மொழிகளுக்குமே இந்தி நண்பன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். அதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தக்க பதில் அளித்தார்.

பிராந்திய மொழிகளுக்கு இந்தி போட்டியில்லை என்று தெரிவித்த அமித்ஷாவுக்கு பதில் கொடுக்கும் வகையில் கி.வீரமணி பேசினார். பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையிலுள்ள அவரது திருவுருவசிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு கி.வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  திராவிட மண்ணை காவி மண்ணாக மாற்றுவதற்கான முயற்சிகள் தீவிரமாக உள்ள சூழ்நிலையில் அண்ணாவின் படம் தேவையில்லை அவரின் பாடம் தேவை.

இந்தி தான் இந்தியாவை இணைக்கும் என்று உள் துறை அமைச்சர் உளறுகிறார். இந்தி இந்தியாவை இணைக்குமா (அல்லது) பிளக்குமா என்பதை ஒவ்வொரு மாநிலமும் சொல்லிக்கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி கூறியதாவது, அண்ணாவின் சாதனைகள் மற்றும் புகழ் எப்போதும் தேவைப்படுவதைவிட தற்போதைய காலகட்டத்திற்கு அதிகம் தேவைப்படுகிறது என தெரிவித்தார். அதேபோன்று  திராவிடமாடல் ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் பேரறிஞர் அண்ணா என புகழாரம் சூட்டினார். திராவிடமாடல் ஆட்சி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தமிழக அரசை கி.வீரமணி பாராட்டினார்.

Categories

Tech |