மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதே மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தான் அனுப்பிய கடிதத்திற்கு மத்திய அரசு இந்தி மொழியில் பதிலளித்ததாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அளிக்கிறதோ அந்த மொழியில் மத்திய அரசு பதில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். செய்தியாக இருந்தாலும், விளக்கமாக இருந்தாலும் அதனை தாய்மொழியில் புரிந்து கொள்ளும்போதுதான் முழுமையடைகிறது.. மத்திய அரசும், அதன் அலுவலர்களும் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.