தமிழ், மலையாளத்தில் அதிக படங்கள் நடித்துள்ள நிவேதா தாமஸ் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வளர்கிறார்.
சம்பள விஷயத்தில் தயாரிப்பாளருக்கு எப்போதுமே பாரமாக இருந்தது இல்லை என நிவேதா தாமஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இதுவரை தான் நடித்த அனைத்து படங்களிலும் கதாபாத்திரங்கள் மிகவும் வலுவாக அமைந்தன எனவும், தனது கதாபாத்திரங்களில் நம்பிக்கையோடும் நடித்தேன் எனவும், குறிப்பிட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என எந்த சினிமாத் துறையிலும் தான் மோசமான அனுபவங்களை எதிர் கொள்ளவும் இல்லை எனவும், OTT படங்களில் நடிக்க எந்த ஒரு இயக்குநரும் தன்னை அணுக வில்லை எனவும், யாராவது வாய்ப்பு கொடுத்தால் கதாபாத்திரம் தனக்கு பிடித்து இருந்தால் நிச்சயம் OTT படங்களில் நடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.