Categories
ஆன்மிகம் இந்து

எந்த ராசிக்காரர்கள், எந்த பொருள் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம்.. அறிந்துகொண்டு வாழ்வில் சிறப்பை காணுங்கள்..!!

மகா சிவராத்திரி அன்று எந்த ராசிக்காரர்கள், எந்த பொருளால் அபிஷேகம் செய்யலாம்.. 21 2 2020 இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது..

இன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டிலுள்ள சிவபெருமான் உருவப்படத்திற்கு தீபாராதனை காட்டி, மனதார சிவநாமத்தை ஜெபித்து உங்கள் காரியங்களை தொடங்க வேண்டும்.

அதன் பிறகு சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும். அங்கு நடக்கும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ளலாம். பூஜையின்போது சிவாயநம அந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து கொள்வது ரொம்ப சிறந்ததாக இருக்கும்.

சிவனுக்கு அபிஷேகம் என்பது ரொம்ப விசேஷம். அப்பொழுது எந்தெந்த ராசிக்காரர்கள், எந்த பொருளால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் சிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை கொண்டு சிவலிங்கத்திற்கு படைத்து சிவ பஞ்சாட்சர மந்திரத்தை சொல்வது சிறப்பு.

ரிஷபம்:

தயிரை கொண்டு அபிஷேகம் செய்யவேண்டும்.

மிதுனம்:

கரும்புசாறு கொண்டு அபிஷேகம் செய்யுங்கள்.

 கடகம்:

சர்க்கரை சேர்த்த பால் அதாவது, பாலாபிஷேகம் செய்யும் பொழுது வெறும் பால் பண்ணுவார்கள், அது இல்லாமல் வந்து சர்க்கரை கலந்த பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

 சிம்மம்:

சிவப்பு சந்தனம் கலந்த பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

கன்னி:

வெறும் பால் கொண்டு அபிஷேகம் செய்யவேண்டும். சர்க்கரை இல்லாத வெறும் பால்.

துலாம்:

பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

விருச்சிகம்:

தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

தனுசு:

குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். பஞ்சாங்கம் மந்திரத்தை படித்தால் ரொம்ப சிறப்பு.

மகரம்:

நல்லெண்ணெய் அபிஷேகம் செய்ய வேண்டும். அதேபோல வில்வம் பழம் இருக்கிறதல்லவா அதையும் சிவபெருமானுக்கு படைத்தால் ரொம்ப சிறந்தது.

கும்பம்:

இளநீர் அல்லது கடுகு எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

மீனம்:

குங்குமப்பூ, பால் அபிஷேகம் செய்தால் மிகவும் சிறப்பானது.

சிவராத்திரி 

இது வெறும் மகாசிவராத்திரி அன்றைக்குத்தான் செய்யனும்னு இல்லை.. நமக்கு மாதந்தோறும் சிவராத்திரி வருது உதாரணம் சொல்லனும்னா…

மார்ச் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரி..

ஏப்ரல் 21 செவ்வாய்க் கிழமை சிவராத்திரி..

மே மாதம் 21 புதன்கிழமை. ஜூன் 19 சிவராத்திரி வெள்ளிக்கிழமை , ஜூலை 19 சிவராத்திரி ஞாயிற்றுக்கிழமை,

சிவராத்திரி இந்த மாதிரி தமிழ் கேலண்டரில் நீங்க பார்த்தீர்களென்றால் சிவராத்திரி நாட்கள் போட்டிருக்கும், அந்த நாட்களில் நீங்க குறிப் ரொம்ப விசேஷமாக இருக்கும்..

 

Categories

Tech |