தமிழகத்தில் அரசு பொது மருத்துவமனைகளில் 18 முதல் 59 வயது உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படாது என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 2022 ஜனவரி 16 முதல் கொரோனாவை ஒழிப்பதற்காக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எந்த வயதினர் எந்த வகை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என்பதனை குறித்து தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கோவக்சின் அல்லது கோவிசீல்டு தடுப்பூசியும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திகொள்ளலாம். ஸ்புட்னிக் தடுப்பூசியை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.