மாஸ்க் அணிவதால் கொரொனா தடுக்கப்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனல்ட்டு ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்தால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ட்ரம்ப்யிடம் வெள்ளை மாளிகையில் கடந்த மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. கொரொனா நெருக்கடி நேரத்தில் இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் மாஸ்க் அணியாதது ஏன் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப் மாஸ்க் அணிவதால் கொரொனா தடுக்கப்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார்.
மேலும் எந்நேரமும் மாஸ்க் அணிந்தவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.கொரொனா தடுப்புக்கு மாஸ்க் அவசியம் இல்லை என்றும் தான் அதை அணிய போவதில்லை என்றும் ட்ரம்ப் ஏற்கனவே தெரிவித்திருந்ததால் சர்ச்சை எழுத்தது. கொரொனா தடுப்புக்கு மாஸ்க் தேவையில்லை என தற்போது குறிப்பிட்டிருப்பது புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.