சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சூப்பர் சிங்கரில் நல்ல பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் பெரும் இடம்பிடித்துள்ள சௌந்தர்யா தொலைக்காட்சியில் நடக்கும் விஷயங்களை பாடல்களாக பாடுவதிலும் வல்லவர். இவருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
— Soundarya Bala Nandakumar (@Itsmesoundarya) August 3, 2021
இந்நிலையில் அவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று சர்ஜரி ஒன்று நடந்ததாகவும், அதில் இருந்து அவர் குணமாக நாட்களாகும் என்பதால் தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.