செல்போன் தராததால் 23 வயது நண்பனை ஒரு சிறுவன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் பர்சியோனியை என்ற பகுதியில் 23 வயதான பிரிதம் கமேட் என்பவருக்கு ஒரு சிறுவன் நண்பனாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுவனுடன் பிரிதம் கமேட் பேசிக் கொண்டிருந்தபோது அந்த சிறுவன் செல்போன் கேட்டுள்ளார். அதற்கு செல்போனில் சார்ஜ் இல்லை என்றும், நான் உனக்கு கொடுக்க மாட்டேன் எனவும் பிரீதம் கூற ஆத்திரமடைந்த சிறுவன் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த சிறுவன் தனது நண்பனான பிரிதம் கமேடை இரும்பு கம்பியால் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த பிரீதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பிரிதம் கமேட் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர்.