நாக சைதன்யா இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக இணையத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
சுமூகமாக இவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பாக இருவரும் பிரிந்தார்கள். விவாகரத்துக்குப் பின் சமந்தா தன்னுடைய பட கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் அவரின் குடும்பத்தார்கள் அவருக்கு பெண் பார்த்து வருவதாகவும் செய்திகள் பரவி வந்தது. மேலும் நாகசைதன்யா மணப்பெண் நடிகையாக இருக்க கூடாது என கண்டிசன் போட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் நாகசைதன்யா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நானும் சமந்தாவும் இன்னும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை. இரண்டாவது திருமணத்திற்கு நான் தயாராகி வருவதாக பரவி வரும் வதந்தி பொய்யானது. அது மிகவும் எனக்கு வருத்தத்தை அளிக்கின்றது. தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என நாக சைதன்யா கூறியுள்ளார். இந்நிலையில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிறார் நாக சைதன்யா என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.